தமிழினத்தை பாடையேற்றுவதற்கு முற்படுகிறார அன்னிய கைக்கூலி சாணக்கியன்?

பாரளமண்றக்குழுத்தலைவர் சி.சிறீதரன் அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்கூறும் பணியை சாணக்கியனுக்கு வழங்கியது யார் ???
இன்றைய நாட்களில் இலங்கை தமிழரசுக்கட்சி தமிழர்களுக்கு செய்கின்ற துரோகத்தின் உச்சகட்டத்தை நாம் கண்டு வருகிறோம்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள சாணக்கியன் தனது இனத்துரோக அரசியலை அரங்கேற்றுவதற்கு தொடங்கியுள்ளார்
தேர்தல் காலத்தில் வெள்ளாட்டு வேடமிட்ட சாணக்கியன் இப்போது தனது கறுப்பாட்டு தோற்றத்தை வெளிப்படுத்துகிறார்.

இனத்தின் வாழ்வு எக்கதியானாலும் பறவாயில்லை நீதி, தர்மம் இவை எக்கதியானாலும் கவலையில்லை என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்துகிறார் சாணக்கியன்.

கட்சியின் பெரும்பாண்மையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சிறீதரன் அவர்களை ஏற்க மறுத்து நாடாளமண்றக் குழு தலைவராக செயற்படும் சிறீதரன் அவர்களை

சாதாரண கட்சியின் தொண்டர் என்பது போல சித்தரித்து ஊடகங்களுக்கு கருத்துக்கூறும் சணக்கியனின் செயலானது தமிழனத்தின் நல்ல எதிர்காலத்திற்காக செயற்படக்கூடிய சிறீதரனையும் கட்சியை விட்டு வெளியேற்றி விட்டு அவரது இடத்திற்கு ஆபிரஹாம் சுமந்திரனை பாரளமண்றம் அழைத்து சென்று ஏற்கனவே நல்லாட்சி காலத்தில் உருவாக்கிய யாப்பின் எஞ்சிய பகுதிகளையும் பூர்த்தி செய்து தமிழர்களின் உரிமைப்பிரச்சனைக்கான இறுதி தீர்வை பெற்றதாக கூறி தமிழினத்தை பாடையேற்றுவதற்கு முற்படுகிறார்கள்.

இவர்களது செயலுக்கு சீ வீ கே சிவஞானம் மாவை சேனாதிராசா, பா சத்தியலிங்கம், உள்ளாட்ட சுயநல நரிகள் கூட்டாக கை கோர்த்திருப்பதை காண முடிகிறது.
சுமந்திரனை அவரது தொகுதி மக்கள் நிராகரித்து தோற்கடித்த நிலையில் தமிழ் மக்களுக்காக செயற்படும் தகுதியை இழந்துள்ள சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் மறைமுகத்தலைவனாக தனது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு துணைவரக்கூடிய சீ வீ கே சிவஞானத்திற்கு கட்சியின் தலைமை பதவியை வழங்கியிருப்பததும் மக்களால் நிராகரிக்கப்பட்ட சத்தியலிங்கத்தை பதில் செயலாளராக செயற்படவும் தேசிய பட்டியலுக்கு ஊடாக பாரளமண்றம் அனுப்பிய செயலானதும் தமிழரசுக்கட்சியின் இனவிரோத மக்கள்விரோத செயலை அம்பலப்படுத்தி நிற்கும் நிலையில்

கடந்த காலத்தில் தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளராக செயற்பட்ட சுரேஸ்பிறேமச்சந்திரன் தேர்தலில் தோல்வியடைந்ததை காரணம் காட்டி ஊடகப்பேச்சாளர் பதவியை அபகரித்த சுமந்திரன் இப்போது தான் தேர்தலில் தோற்றுப்போன நிலையில் எவ்வாறு கட்சியின் ஊடகப்பேச்சாளராக செயற்படுகிறார்.
எதேட்சதிகாரமாக செயற்படும் சுமந்திரனை தமிழர் அரசியல் பரப்பில் இருந்து முற்றாக அகற்றவேண்டியதேவையும்

மாவை சேனாதிராசா, சீ வீ கே சிவஞானம், சத்தியலிங்கம், சாணக்கியன் இவர்களோடு கைகோர்த்து செயற்படுவோரையும் ஈழத்தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.
தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளோடு கூட்டு சேர்ந்து பலமான தமிழர் அரசியலை முன்னெடுப்பதற்கு சிறீதரன் அவர்கள் எடுக்கும் நல் முயற்சியை எள்ளி நகையாடும் அன்னிய கைக்கூலி சாணக்கியன் ஊடகங்களில் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் ஆகியோர் கூடிப்பேசுவதை தரக்குறைவாக விமர்சிப்பதன் உள்ளார்ந்த நோக்கத்தை தெளிவாக விழங்கிக்கொண்டு கிழக்கு மாகண தமிழ் மக்கள் தம்மால் தெரிந்தெடுக்கப்பட்ட சாணக்கியனின் இனத்துரோக செயலை தடுத்து நிறுத்துவதற்கு முற்பட வேண்டும் அதேவைளை பாராள மண்றத்திற்குள் இணைந்து செயற்பட்டு தமிழினத்திற்கு அனீதியிழைக்க முற்படும் சுமந்திரன், சாணக்கியன் குழுவினரது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
தமிழ்மறவன்.

சுமனோடு என்று சேர்ந்தாரோ அன்றிலிருந்து இனத்தை அழிக்கும் வேளையில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்

இரகசியமாக கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம்; சாணக்கியன் சுமந்திரனின் கூட்டுச்சதி அம்பலம்!

சிறப்புச் செய்திகள்