EPF, ETF தொடர்பில் நிதி அமைச்சர்

மிகைக் கட்டண வரி விதிக்கப்படவுள்ள நிறுவனங்களில் EPF, ETF உள்ளிட்ட மேலும் 09 நிதியங்கள் உள்ளடங்கவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அமைச்சரவைக்கு தௌிவுபடுத்தியுள்ளார்.

நேற்றைய (14) அமைச்சரவை கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2020 மற்றும் 2021 மதிப்பீட்டு ஆண்டுகளில் 2,000 பில்லியனுக்கும் அதிகமான வரி அறவிடப்படக்கூடிய வருமானம் பெறும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் ஒரே தடவையில் 25 வீத மிகைக் கட்டண வரியே விதிக்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான 69 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மிகைக் கட்டண வரி விதிக்கப்பதனூடாக 105 பில்லியன் ரூபா பெறப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்