சீரற்ற காலநிலையினால் தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால், சில ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும் குறித்த ஆறுகளை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, களுகங்கை, மாகுறு கங்கை மற்றும் குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், புத்தளம்(Puttalam) முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு காலநிலை மாற்றம் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில், நாளை (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மறு அறிவித்தல் வரை, இந்த பகுதிகளில் கடல்சார் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்