இலங்கைக்கான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீன அரசுக்கு சொந்தமான எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான கடனுதவியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடன் நிறுத்தப்பட்டமையை அடுத்து கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீனர்கள். அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
அத்துடன் இந்த கடன் நிறுத்தல் காரணமாக சுமார் 2000 இலங்கையர்களி;ன் தொழில்களும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இலங்கை நிறுத்தியுள்ளமை ஆகியவற்றை கருத்திற்கொண்டே இலங்கை அரசாங்கத்தின் சீனாவின் எக்ஸிம் வங்கி கடனை இடைநிறுத்தியுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் இதுவரை இலங்கை அரசாங்கத்தின் 33 பில்லியன் ரூபா நிதியில் சுமார் 32 வீதமான வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com