மாணவி ஒருவரின் தாய்க்கும் ஆசிரியை ஒருவருக்கும் ஏற்பட்ட ஓரினக் காதலால் இரு பெண்களும் ஓடிய சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருகையில்,
வத்தளையை சேர்ந்த 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் உள்ள 29 வயது உடைய ஆசிரியையுடன் மாணவியின் தாயார் நட்புடன் பழகி வந்த நிலையில் அது காதலாக மாறியுள்ளது. இதன்பின் திடீரென இருவரும் காணாமல் போயுள்ளனர்.
இதனைத் அடுத்து தனது மனைவியை காணவில்லைஎன பொலிஸ்நிலையத்தில் குறித்த இரு பெண்களினது கணவர்கள் முறைபாடு செய்ததை அடுத்து அவர்கள் கண்டி தலதாமாளிகையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டனர்.
இதன்பின் காவல்துறையினர் குறித்த பெண்களுக்கு ஆலோசனை வழங்கி கணவருடன் செல்லுமாறு கூறியுள்ளனர் எனினும் அவர்கள் தமது கணவனுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.