சலுகை வட்டி அடிப்படையில் நிதி!

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சிபெறும், ஆசிரியர் பயிலுநர்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில், அரச வங்கியில் நிதியை பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. க.பொ.த (உயர்தர) பரீட்சை மூலம் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு 2 வருடங்கள் கல்விசார் பயிற்சிகளிலும், ஒரு வருடம் உள்ளகப் பயிற்சியும் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். ஒரு வருடகால உள்ளகப் பயிற்சிக்காக கல்வியியல் கல்லூரிகளில் […]

இலங்கையில் 3 மாம்பழங்களை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்த தமிழர். ஏன் தெரியுமா?

இலங்கையில் மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை ஆகியவற்றை 10 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் பெற்றுக்கொண்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டம் கணேசபுரம் பகுதியிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் அலங்கார திருவிழா உற்சவம் நடைபெற்று வருகின்றது. இதன்படி, இந்த திருவிழா உற்சவத்தின் விசேட பூஜைகள் நேற்றைய தினம் நடைபெற்றன. இதன்போது, விநாயகருக்கு மாம்பழங்கள் மற்றும் மாலை அணிவித்து, விசேட பூஜைகள் நடைபெற்றன. விநாயகருக்கு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் மற்றும் மாலைகள் இதன்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. […]

அதிக உணவு பணவீக்கம், முதல் 5 நாடுகளின் பட்டியலில் இலங்கை!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படி, உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் லெபனான் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் துருக்கி ஆகியவை உள்ளன. பட்டியலில் ஐந்தாவது இடத்திலுள்ள இலங்கைக்கு அடுத்தபடியாக ஈரான், ஆர்ஜென்டினா, சூரினாம், எத்தியோப்பியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் உள்ளன. இலங்கையில் உரத் தட்டுப்பாடு […]

இலங்கை நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 37 சதம் விற்பனை பெறுமதி 368 ரூபா 69 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 420 ரூபா 53 சதம். விற்பனை பெறுமதி 437 ரூபா 77 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 372 ரூபா 4 சதம் சுவிஸ் பிராங் […]

பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும்

அரசாங்கம் தலையீடு செய்யுமாயின் பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் என்.கே ஜயவர்தன இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார். வெதுப்பக தொழிற்துறையை தற்போது கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் பாரிய விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. பாண் […]

வர்த்தமானியை இரத்து செய்யாவிடின் உற்பத்தியிலிருந்து விலகுவோம்

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி இரத்து செய்யாவிடின் முட்டை உற்பத்தியில் இருந்து விலகுவோம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்தார். நிர்ணய விலைக்கு மேலதிகமாக முட்டையை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கு 1 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை தண்டபணம் விதிக்கப்படும் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும், நிறுவன ரீதியில் பதிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு 5 இலட்சம் முதல் 50 இலட்சம் […]

எட்டு மாதங்களின் 75 முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்த வருட ஓகஸ்ட் மாத முதலாம் வாரம் வரையிலான காலப்பகுதியில், 75 முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை முதலீட்டு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் மொத்தப்பெறுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அவற்றில் 925 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நேரடி முதலீடாகவுள்ளது. அத்துடன், 361 மில்லியன் அமெரிக்க டொலர் உள்நாட்டு முதலீடுகளாக பதிவாகியுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் […]