சலுகை வட்டி அடிப்படையில் நிதி!

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சிபெறும், ஆசிரியர் பயிலுநர்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில், அரச வங்கியில் நிதியை பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

க.பொ.த (உயர்தர) பரீட்சை மூலம் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு 2 வருடங்கள் கல்விசார் பயிற்சிகளிலும், ஒரு வருடம் உள்ளகப் பயிற்சியும் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

ஒரு வருடகால உள்ளகப் பயிற்சிக்காக கல்வியியல் கல்லூரிகளில் தங்குமிடம் வழங்கப்படாததுடன், தங்குமிடம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை ஆசிரிய பயிலுநர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டி ஏற்படுகிறது.

தற்போது ஆசிரிய பயிலுநர் ஒருவருக்கு கல்விசார் பயிற்சியின் போது செலுத்தப்படும் 5,000/- ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது

இதனால், ஆசிரிய பயிலுநர்களுக்கு தற்போது கிடைக்கின்ற கொடுப்பனவுக்கு மேலதிகமாக மாதமொன்றுக்கு உயர்ந்தபட்சம் மேலும் 10,000/- நிதி வசதியை சலுகை வட்டி அடிப்படையில் அரச வங்கியொன்றினூடாகப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்