முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி இரத்து செய்யாவிடின் முட்டை உற்பத்தியில் இருந்து விலகுவோம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
நிர்ணய விலைக்கு மேலதிகமாக முட்டையை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கு 1 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை தண்டபணம் விதிக்கப்படும் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும், நிறுவன ரீதியில் பதிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு 5 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை தண்டபணம் விதிக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சந்தையின் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வர்த்தமானியின் விலைக்கமைய முட்டை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆராய நுகர்வோர் அதிகார சபை கண்காணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
கடந்த நாட்களில் ஒரு முட்டையின் விலை 70 ரூபாவை அண்மித்த நிலையில் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு கடந்த 19ஆம் திகதி முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.
அதற்கமைய வெள்ளை முட்டையின் விலை 43 ரூபாவாகவும்,கபில நிற முட்டையின் விலை 45 ரூபாவாகவும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டது.70 ரூபாவை அண்மித்த முட்டையின் விலையை முட்டை உற்பத்தியாளர்கள் 5 ரூபாவினால் குறைத்ததை தொடர்ந்து அரசாங்கம் முட்டை மீதான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தது.
வர்த்தமானியில் குறிப்பிட்டதற்கமைய விலையை குறைக்க முடியாது,அந்நிய செலாவணி பற்றாக்குறை,கால்நடை தீவினத்தின் விலை அதிகரிப்பு மற்றும் பற்றாக்குறை ஆகிய காரணிகளினால் முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் வர்த்தமானிக்கு எதிராக அதிருப்தி வெளிப்படுத்துகின்றனர்.
முட்டை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை திருத்தம் செய்யுமாறு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
தமது கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்த முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க குறிப்பிடுகையில்,
ஒரு முட்டைக்கான உற்பத்தி செலவு 52 ரூபாவாக காணப்படும் பின்னணியில் முட்டையின் விலையை 43 ரூபாவாகா தீர்மானிப்பது நியாயமற்றதாகும். வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி திருத்தம் செய்யப்பட வேண்டும் இல்லாவிடின் முட்டை உற்பத்தியில் இருந்து விலகுவோம் என்றார்.
வர்த்தமானியில் குறிப்பிட்ட விலைக்கமைய முட்டை விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
நிர்ணய விலைக்கு மேலதிகமாக முட்டையை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கு 1 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை தண்டபணம் விதிக்கப்படும் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.
நிறுவன ரீதியில் பதிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு 5 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை தண்டபணம் விதிக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com