பணவீக்கம் 2022 ஏப்ரலில் தொடர்ச்சியாக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மாச்சின் 18.7 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 29.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பானது 2022 ஏப்பிறலில் உணவு மற்றும் உணவல்லா ஆகிய இரு வகைப்படுத்தல்களினதும் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மாச்சில் 30.2 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 46.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் […]

மத்திய வங்கியின் அறிவிப்பு!

வீட்டுத்துறை மற்றும் வீட்டுத்துறைக்குப் பணியாற்றும் இலாபமீட்டாத நிறுவனங்கள் துறையிலிருந்து 2021இல் நடப்புச் சந்தை விலைகளில் மதிப்பிடப்பட்ட சேர்க்கப்பட்ட மொத்தப் பெறுமதிக்கு தொடர்ந்தும் பாரியளவில் பங்களிப்புகள் கிடைத்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வேளாண்மை மற்றும் பணிகள் நடவடிக்கைகளுக்கு வீட்டுத்துறை மற்றும் வீட்டுத்துறைக்குப் பணியாற்றும் இலாபமீட்டாத நிறுவனங்கள் துறை பாரியளவு பங்களிப்பினை நிலைநிறுத்தின. அத்துடன், கைத்தொழில் நடவடிக்கைகளை நிதியல்லா நிறுவனங்கள்துறை ஆதிக்கம் செலுத்தியது. அதற்கமைய, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 48.0 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வீட்டுத்துறை மற்றும் வீட்டுத்துறைக்குப் பணியாற்றும் இலாபமீட்டாத […]

இலங்கையின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 3.7 சதவீதத்தால் வளர்ச்சி

இலங்கையின் பொருளாதாரம், கடந்த ஆண்டு 3.7 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்ட சுருக்கத்தைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டு மீட்சியடைந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக தேசிய கணக்கீட்டு மதிப்பீடுகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 3.6 சதவீத சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டு 3.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. […]

பெற்றோலிய தாங்கிவூர்திகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தாங்கிவூர்திகளின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோலிய தாங்கிவூர்திகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் பி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப போக்குவரத்து கட்டண சூத்திரம் திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் […]

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்ய புதிய நிறுவனம்

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக, தாய்லாந்தின் புதிய நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் சியாம் கேஸ் என்ற நிறுவனம் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த போதே அவர் குறிப்பிட்டார். கடந்த 2ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனம், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ […]

மருந்துகளின் விலைகளை அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

60 வகையான மருந்துகளுகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை 2,702 ரூபா 41 சாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 […]

இம்மாதத்தின் இதுவரை 55,600 சுற்றுலா பயணிகள் வருகை

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55,600 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 500 பேர் நாட்டிற்கு வருகை தந்தனர். இதன்படி, ஏப்ரல் மாதம் சுற்றுலா பயணிகள் வருகை 50 சதவீதத்தால் வீழச்சியடைந்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமுக சூழலே சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்க்கான காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏப்ரல் மாத்தில் நாட்டிற்கு நாளாந்தம் பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 3 ஆயிரத்து […]