சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம்

(லியோ நிரோஷ தர்ஷன்) நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடியும் மேலோங்கியுள்ளது. இதனால் உண்மையான பொருளாதார பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. இந்திய நிதியுதவிகள் மே மாதத்துடன் முடிவடைகின்றமையால் நாட்டின் உண்மையான பிரச்சினைகள் இனிமேல் தான் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறிப்பாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் இலங்கை எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடிகளே எதிர்வரக் கூடிய பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமாகும். எனவே, இலங்கையின் இறுதி எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் சீன கடன்களை மீள […]

நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் டீ.பி.சாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எரிபொருள் கட்டணம் அதிகரிப்புக்கு ஏற்றவகையில் தாங்கி ஊர்திக்கான கட்டணத்திலும் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அந்த சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர். இவ்வாறான பின்னணியில் நேற்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்ட வலுசக்தி அமைச்சர் கஞ்சன […]

உரங்களை விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த தீர்மானம்

உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். உரத்தை இறக்குமதி செய்து தனியாரால் அதிக விலைக்கு விற்பனை செய்வதனால் விவசாயிகள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், உர இறக்குமதி விடயம் தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்க முன்வந்துள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர மேலும் […]

சட்டவிரோதமான முறையில் எரிவாயு விநியோகம் செய்த இருவர் கைது

உரிமம் இன்றி சட்டவிரோதமான முறையில் லிட்ரோ எரிவாயுவை தாங்கிகளில் சேமித்து வைத்து விற்பனை செய்த இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ராஜகிரிய – மிரிஹான பிரதேசத்தில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு லிட்ரோ எரிவாயுவுடன் கூடிய 12 தாங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த எரிவாயு தாங்கிகள் மேலதிக விசாரணைக்காக நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் […]

IMF-இடம் அவசர நிதி உதவி கோரப்பட்டுள்ளது

அவசர நிதி உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான இலங்கைக்குழு வாஷிங்டன் DC-க்கு விஜயம் செய்திருந்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறுகிய மற்றும் நடுத்தர கால, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எரிபொருள், எரிவாயு […]

யூரோவை பயன்படுத்தும் நாடுகளில் பணவீக்கம் அதிகரிப்பு

யூரோவை நாணயமாக பயன்படுத்தும் 19 நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் ஆண்டு பணவீக்கம் இந்த மாதம் 7.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் எரிசக்திகளின் விலை 38 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 34.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா பண வீக்கம் அமெரிக்க ஆண்டு பணவீக்கத்திலும் எதிரொலித்துள்ளது.அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த மாதம் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரஷ்யா உகிரைன் போர், ரஷ்யாவிடம் இருந்து […]

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சமூக நல நிவாரண முறையொன்று அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று (29) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,இதற்காக அவசர தேவைகள் உலக வங்கி நிதியுதவியின் கீழ் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி ஏற்கனவே […]