இலங்கையின் பொருளாதாரம், கடந்த ஆண்டு 3.7 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு கொவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்ட சுருக்கத்தைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டு மீட்சியடைந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக தேசிய கணக்கீட்டு மதிப்பீடுகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் முன்னைய
ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 3.6 சதவீத சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டு 3.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.
2021ஆம் ஆண்டுகாலப்பகுதியில், பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.
வேளாண்மை, காடாக்கல் மற்றும் மீன்பிடி துறையின் செயலாற்றல் என்பனவும் தானியங்கள், எண்ணெய் பசையுள்ள பழங்கள் மற்றும் தேயிலை போன்ற துணை வகைகளின் பயிர்ச்செய்கைகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியால் மிதமடைந்திருந்தன.
இதேவேளையில், அரிசி மற்றும் ஏனைய பயிர்ச்செய்கையில் காணப்பட்ட சுருக்கமானது, துறைசார் செயலாற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தினைக் கொண்டிருந்ததாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைத்தொழில் துறையினுள் உள்ள பெரும்பாண்மையான துணை வகைகள் வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலையங்கள் இடைக்கிடையே நிறுத்துப்படுவதன் காரணமாக நிலக்கரி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கனியவள உற்பத்திகளுடன் தொடர்புபட்ட தயாரிப்பு நடவடிக்கைகளில் சீரற்றத்தன்மையில் காணப்பட்டதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





