குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக, தாய்லாந்தின் புதிய நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் சியாம் கேஸ் என்ற நிறுவனம் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த போதே அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனம், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக, ஓமானில் இருந்து நாட்டுக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது.
எனினும், குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதற்கமைய அடுத்த மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக விலைமனு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை ஓமான் நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய குறித்த நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட 3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில வாரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும்
எதிர்வரும் சில வாரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் பெருந்தொகையான சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் நகர பகுதிகளிலே இருக்கின்றனர்.
இதன்காரணமாக நகர பகுதிகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமையல் எரிவாயு தாங்கிய மேலும் ஒரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
அந்த கப்பலில் சுமார் 3,500 மெற்றிக் டன் சமையல் எரிவாயு அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





