இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை வங்கி கட்டமைப்பில் ஊடாக. விசேட வர்த்தமானி

இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை வங்கி கட்டமைப்பில் ஊடாக செலுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படுமென மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, அவர் மேலும் உரையாற்றுகையில், வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்களுக்கு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கொடுப்பனவுகளுக்கும் தேவையான அத்தியாவசிய வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை வழங்குமாறு அனைத்து வங்கிகளிடமும் கோரிக்கை விடுக்கப்படும். அனைத்து வெளிநாட்டு […]

எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை

2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறு தினம் பொது விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து […]

1 மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டு இல்லை

எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டினை மேற்கொள்ளாதிருக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி புனித ரமழான் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மின்துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 2ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் மின்வெட்டு 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மினவெட்டினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி […]

3,500 மெட்ரிக் டன் எரிவாயுடன் மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு

அடுத்த சில வாரங்களில் எரிவாயு பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு அதிகபட்ச எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகித்து தற்போதுள்ள பற்றாக்குறையை நிவர்த்திக் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். பெரும்பாலான எரிவாயு நுகர்வோர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், நகர்ப்புற விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் லிட்ரோ தெரிவித்துள்ளது. அத்துடன் 3,500 மெட்ரிக் டன் எரிவாயுடன் மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. இதேவேளை, இந்திய கடன் […]

அமெரிக்க டொலரின் பெறுமதி 360 ரூபாவை நெருங்கியது

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி- 347 ரூபா 5 சதமாகவும், விற்பனை பெறுமதி 359 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” […]

இலங்கை மக்களுக்கு உணவு – தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதிகோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசு இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார். அதற்கமைய, 80 கோடி ரூபா பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் […]

IMF வேலைத்திட்டம் இரு மாதங்களில் உடன்படிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியாளர் மட்ட அல்லது ஆரம்பகட்ட உடன்படிக்கையை எட்ட முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை வர்த்தக சம்மேளன குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இதற்கமைவான பொருளாதார கட்டமைப்பை நிறுவும் பணிகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக, கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன், ஆரம்பநிலை அதாவது, பணிக்குழாம் மட்டத்திலான […]