பெண்களுக்கு இரவு நேரப் பணியை அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம்

கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துதல்) 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் எண் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, இது பெண்களுக்கான இரவு நேர வேலை குறித்த பழமையான தடை சட்ட விதிகளை நீக்குகிறது.

அந்நியச் செலாவணியை உருவாக்கும் பல்வேறு சேவைத் துறை தொழில்துறையினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மேற்படி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார திங்கட்கிழமை அமைச்சரவையின் அனுமதியை கோரினார்.

சட்டத்தின் தற்போதைய விதிகளின்படி, பெண்கள் மாலை 6:00 மணி வரை மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே சேவை-ஏற்றுமதி தொடர்பான தொழிற்றுறைகள் பெண்களை வேலைக்கு அமர்த்த தயங்குகின்றன.

எனவே, பெண்களின் இரவுப் பணி தொடர்பாக தற்போதுள்ள தடை சட்ட விதிகள் திருத்தப்பட வேண்டும் என அரசு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெண் தொழிலாளர் பங்கேற்பு 30 வீதமாக உள்ளது, இதற்கு தற்போதுள்ள தொன்மையான சட்டங்கள் ஓரளவு காரணமாகும்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com