மருத்துவர்களின் விடுதியின் மீது விழுந்து நொருங்கிய ஏர் இந்தியா விமானம்!

இந்தியாவின் அஹமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் மருத்துவர்களின் விடுதியின் மீது விழுந்து நொருங்கியது என தகவல்கள் வெளியாகின்றன.

விமானம் புறப்பட்டு சிலநிமிடங்களில் மருத்துவர்களின் விடுதியின் மீது விழுந்து நொருங்கியது என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அந்த இடத்திற்கு ஒரிருநிமிடங்களில் அவசர சேவை பிரிவினர் சென்றுவிட்டதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானமே விபத்துக்குள்ளானதில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 61 வெளிநாட்டவர்கள் பயணம் செய்ததாக விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்தியர்கள் 169 பேர் , பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 53 பேர், போர்த்துகீசிய நாட்டினர் 7 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிறப்புச் செய்திகள்