இந்தியாவின் முதல் 10 இடங்களிலுள்ள பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஸ் அம்பானி முதலிடம் பெற்றுள்ளார்.
அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 115.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணக்காரர்களில் இந்தியளவில் முதல் இடத்திலும் உலகளவில் 15ஆவது இடத்திலும் அவர் பட்டியலிடப்பட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள அதானி நிறுவனத்தலைவர் கௌதம் அதானி, இந்திய பணக்காரர்களில் இரண்டாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு 67 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் அவர் 24ஆவது பணக்காரராக விளங்குகிறார்.
Post Views: 320





