நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களுளில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்த தடையும் இன்றி அதனை அணிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.
அத்துடன், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது பொறுத்தமானது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இது அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் கூட்டு முடிவாகும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com