அரிசியின் விலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் அல்லது இரத்துச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) நிராகரித்துள்ளது.
மே 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 220 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோகிராம் 230 ரூபாவாகவும், கீரி சம்பா 260 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி விலையை திருத்தவோ அல்லது அதிகரிக்கவோ அதிகாரசபைக்கு எண்ணம் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500,000 அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com





