சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளது

இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மே மாதம் 52 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மிகவும் குறைந்த சுற்றுலாப் பயணிகள் கடந்த மாதமே நாட்டுக்கு வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதத்தில் 30 ஆயிரத்து 207 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

தரவுகளுக்கு அமைய கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையில் 3 லட்சத்து 78ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்திருந்தனர்.

இந்த ஆண்டு சுற்றுலாத்துறை மீட்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த மே மாதம் நாளாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 974 ஆக குறைவடைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 600 ஆகவும் ஏப்ரல் மாதம் 2 ஆயிரத்து 99 ஆகவும் காணப்பட்டது.


🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்