இலங்கையின் பணவீக்கம் மே மாதம் உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்படி, இலங்கையின் பணவீக்கம் மே மாதம் 39.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 29.8 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது, இந்த மாதம் 39.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், கடந்த ஏப்ரல் மாதம் 46.6 சதவீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம், இந்த மாதம் 57.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஏப்ரலில் 22 சதவீதமாக காணப்பட்ட உணவல்லா பணவீக்கம், இந்த மாதம் 30.6 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25.1 சதவீதமாக காணப்பட்ட ஆடைகள் மற்றும் பாதணிகளுடன் தொடர்புடைய பணவீக்கம், இந்த மாதம் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருளுடன் தொடர்புடைய பணவீக்கம், ஏப்ரலில் 8.1 சதவீதத்திலிருந்து, மே மாதம் 13.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஏப்ரலில் 68.2 சதவீதமாக பதிவாகியிருந்த போக்குவரத்துடன் தொடர்புடைய பணவீக்கம், மே மாதம் 91.5 சதவீமாக அதிகரித்துள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்