இன்று கையிருப்பில் உள்ள எரிபொருள் விபரம் வெளியானது

கப்பல் ஒன்றிலிருந்து மசகு எண்ணெய் இன்று தரையிறக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளைய தினம், டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை ட்விட்டர் பதிவொன்றில் அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 17,077 மெற்றிக் டன் டீசல், 1,072 மெற்றிக் டன் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது.

37,391 மெற்றிக் டன் 92 ஒக்டேன் பெற்றோல், 6,142 மெற்றிக் டன் 95 ஒக்டேன் பெற்றோல், 2,437 மெற்றிக் டன் ஜெட் ஏ1 எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்