இறப்பர் உற்பத்தி கடந்த ஆண்டு முதல் தொடர்ந்தும் குறைவடைந்து காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்கசு நோய்ப்பரவலுடன் இணைந்து பால் சேகரிப்பு நாட்களின் போது பெருந்தோட்டப் பிரதேசங்களில் நிலவிய மழைவீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
2020 இல் இறப்பர் உற்பத்தி செய்யப்பட்ட 78.2 மில்லியன் கிலோகிராமாக காணப்பட்டது.
இது 2021 இல், 1.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து, 76.9 மில்லியன் கிலோகிராம்களாக பதிவானதென மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொத்த இறப்பர் உற்பத்தியின் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கு வகைகூறுகின்ற தட்டை இறப்பர் உற்பத்தி மீளாய்வுக் காலப்பகுதியில் 1.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த அதேவேளை, கிறேப் இறப்பர் உற்பத்தி 7.4 சதவீத வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





