நாடு தழுவிய ரீதியாக பல அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள போதிலும் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் என்பவற்றின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறைந்தளவான பணியாளர்களே இன்று பணிக்கு சென்றுள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு இன்று காலை முதல் 5 சரக்கு கப்பல்கள் வந்துள்ளன.
அதில் உள்ள கொள்கலன்களை தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் வழமை போன்று இன்று காலை முதல் சேவையில் ஈடுபடுகின்றன.
எனினும் பல இடங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
Post Views: 141