கடனை மீள செலுத்த தவறும் நாடாக இலங்கை

Standard and poor’s (S&P) சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனம், தெரிவு செய்யப்பட்ட கடனை திருப்பிச்செலுத்த தவறும் அபாயமுள்ள நாடாக இலங்கையை பெயரிட்டுள்ளது.

2023 ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முதிர்ச்சியடையவுள்ள இறையாண்மை முறிகளுக்கான வட்டியை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட 30 நாள் கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் அதனை செலுத்தத் தவறினால் தரப்படுத்தரில் D மட்டம் வரை இலங்கை தரமிறக்கப்படலாம் என ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

D மட்டம் என்பது கடனை செலுத்தத் தவறும் அபாயமுள்ள நாடு என்பதையே குறிக்கின்றது.

குறித்த காலப்பகுதிக்குள் இலங்கை அந்த வட்டியை செலுத்தும் என எதிர்ப்பார்க்க முடியாது என Standard and poor’s நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மைக் காலமாக முடீஸ், பிட்ச், Standard and poor’s ஆகிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக கடன் தரப்படுத்தலில் இலங்கையை தரமிறக்கி வருகின்றன

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்