சீனி வரி மோசடியின் ஊடாக அரசுக்கு கிடைக்காமல் போன வருவாயை குறித்த தரப்பிடம் அறவிட வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் அதனுடன் தொடர்புடைய தரப்பிடம் இருந்து அறவிடப்பட வேண்டும் என கணக்காய்வாளர் திணைக்களம் தமது அறிக்கையின் ஊடாக பரிந்துரைத்திருந்தது.
சீனி மீதான இறக்குமதி வரியை குறைத்து பெரும் இலாபம் ஈட்டிய இறக்குமதியாளர்களிடம் இருந்து உரிய தொகையை வசூலிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் திகதி பதவிக்கு வந்ததன் பின்னர், சீனிக்கான வரி கிலோவுக்கு 50 ரூபாவிலிருந்து 25சதமாக திடீரென குறைக்கப்பட்டது.
இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட மொத்த வரி வருமான இழப்பு 16.763 பில்லியன் ரூபா என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த வரிக் குறைப்பின் மூலம் கிடைத்த இலாபமானது மொத்த நுவர்வோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, அனைத்து சீனி இறக்குமதியாளர்களிடமிருந்தும் இந்த வரிச் சலுகையின் மூலம் அனைத்து வரம்பற்ற இலாபத்தையும் அரசாங்கம் மீட்டெடுக்க வேண்டும் என்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை பரிந்துரைக்கிறது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





