மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

புறக்கோட்டை மற்றும் தம்புள்ளை பொருளாதார மையங்களில், மரக்கறிகளின் மொத்த விலைகள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

போஞ்சி, தக்காளி, கத்தரிக்காய், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழக்கு என்பனவற்றின் விலைகள், கடந்த 8ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் நேற்றைய தினத்தில் அதிகரித்துள்ளன.

புறக்கோட்டை பொருளாதார மையத்தில், 260 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோகிராம் போஞ்சி, நேற்றைய நாளில், 360 ரூபாவாக அதிகரித்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மையத்தில் 145 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோகிராம் போஞ்சி, நேற்றைய நாளில் 315 ரூபாவாக காணப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பொருளாதார மையத்தில் 120 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோகிராம் தக்காளி, நேற்றைய நாளில் 230 ரூபாவாகவும், தம்புள்ளையில் 115 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோகிராம் தக்காளி, 215 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

புறக்கோட்டையில் 300 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோகிராம் கத்தரிக்காய், நேற்றைய நாளில் 350 ரூபாவாகவும், தம்புள்ளையில் 198 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 265 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை புறக்கோட்டை சந்தையில் 200 ரூபாவிலிருந்து 274 ரூபாவாகவும், தம்புள்ளை சந்தையில் 218 ரூபாவிலிருந்து 295 ரூபா வரையிலும் உயர்வடைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழக்கின் விலை, புறக்கோட்டை சந்தையில், 180 ரூபாவிலிருந்து 210 ரூபா வரையில் உயர்வடைந்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளுக்கான கேள்வி அதிகரித்தமை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் என்பன இந்த விலை உயர்வுக்கு காரணமாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை, சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை ஆயிரம் ரூபாவை அண்மித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்திரை புத்தாண்டு காலத்தில் கோழி இறைச்சி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

அத்துடன், கோழி முட்டையொன்று தற்போது 30 முதல் 34 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் தாம், பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்