மாணவன் ஒருவனின் தாக்குதலால் ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

மாணவன் ஒருவனின் தாக்குலுக்கு உள்ளாகி ஆசிரியர் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, மொனராகலையில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தாக்குதலானது, 11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவனால் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மாணவன் பாடசாலைக்கு தொலைபெசி கொண்டு வருவது குறித்து கேள்வி எழுப்பிய போது ஆசிரியர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்