ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படவுள்ள இராணுவத்தினர்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது அங்கு வாழும் இலங்கை மக்கள் மத்தியில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஏற்பட்ட தாமதம் குறித்து இலங்கையர் ஒருவர் ஜனாதிபதியிடம் குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

2019ஆம் ஆண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, ​​குற்றப் புலனாய்வுத் துறையில் 500 பதவிகள் மாற்றப்பட்டன.

விசாரணைக்குப் பொறுப்பான முன்னாள் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். விசாரணைக்கு பொறுப்பான அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

தடைகள் இருந்தபோதிலும், விசாரணை செயல்முறை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்