நேற்று கோர விபத்தில் சிக்கிய பேருந்து ,பலர் கவலைக்கிடம்!

பதுளை மஹியங்கனை – கிராதுருகொட்ட பிரதான வீதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற சிற்றூர்ந்து விபத்தில் 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதுளை, கைலகொட பகுதியை சேர்ந்த ஒரு குழுவினர் இந்த விபத்தில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் 10 வயது குழந்தை உட்பட ஐந்து ஆண்களும் ஆறு பெண்களும் காயமடைந்தவர்களில் அடங்குவதாகவும், சிற்றூர்ந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் இருந்து பதுளைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சிற்றூர்ந்தின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது காயமடைந்தவர்களை காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குறித்த விபத்தில் சிற்றூர்ந்து பலத்த சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்