தமிழர் பகுதியில் காவல்துறையினரிடம் தப்பி ஓடியவர் கிணற்றில் வீழ்ந்து பலி!

காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (24) இரவு கிளிநொச்சி – இராமநாதபுரம் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இராமநாதபுரம் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்ய முற்பட்ட போது, ஆலடி பகுதியில் சந்தேகநபர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போதே அவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்