வவுனியாவில் சில உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய தடை!

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவகங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநகரசபையின் இன்றைய அமர்வின் போது இந்த உத்தரவை முதல்வர் காண்டீபன் வழங்கியுள்ளார்.

குறிப்பாக வவுனியா நகரத்தில் உள்ள சில உணவகங்களுக்கு பின்புறமாக புகைப்பிடிப்பதற்கென சிறிய பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளை உடன் தடை செய்யுமாறு மாநகர சுகாதார குழு பரிந்துரை செய்துள்ளதையடுத்தே, இந்த உத்தரவை மாநகர முதல்வர் வழங்கியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்