025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குள் ( https://www.doenets.lk ) சென்று பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியும்.
அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டகளில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்காக 134 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகள் கீழே தரப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
இதன்படி இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.





