விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்த குடும்பஸ்தர் யாழ் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த குறித்த நபர் இன்றைய தினம் (09.01.2025) யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா கற்பகபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் வயது 41 என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த 27ஆம் திகதி இரவு அநுராதபுரம் – கெப்பிற்றிக்கொல்லாவ பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கப்ரக வாகனத்தை அந்த பகுதியில் கடமையில் இருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர்.

குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விசேட அதிரடிப்படையினரால் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்திருந்தனர். காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவரது நிலமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் காலை உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்