முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியவின் குடும்ப உறுப்பினர்கள் மூவர் கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஏனைய இரு மகள்களும், மருமகன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று இவர்களைக் கைது செய்தது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரு மகள்களும், மருமகன் ஒருவரும் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகினர். இதன்போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் நேற்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தினால் மீண்டும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்