கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்பு மனு கோரிக்கை அறிவிக்கப்பட்டதும் உள்ளூராட்சி தேர்தலை நோக்காக கொண்ட அன்ரனி ஜெகநாதன் பீற்ரர் இளம்செழியன் தன்னை கொடையாளியாகவும் சமூக ஆர்வராகவும் போலியாக நடிப்பதற்காக பொருட்களை வழங்குவதற்காக புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அறிவாளி புத்தகசாலை அதன் உரிமையாளர் றமீஸ்ஹா சஜீவன் அவர்களிடம் இருந்து 500,000/- பெறுமதியான கொப்பி, புத்தகம், பாடசாலை பை, என்பவற்றை கடனாக காசு 2 நாட்களில் பணம் தருவதாக கூறி இன்றும் கொடுக்காமல் 4 வருடங்கள் ஏமாற்றி வருவதுடன் அவர் அணைத்து இடமும் அலைந்தும் பணம் கொடுக்கவில்லை.

அத்துடன் தேர்தல் நோக்காக புதுக்குடியிருப்பு கந்தசாமி கோவில் வீதியில் அமைந்த சட்டி பானை செய்யும் ஏழைத் தொழிலாளரிடம் 200,000/-பெறுமதியான பொங்கல் பானை செய்வித்து வாங்கி பொங்கலுக்கு தனது தேர்தலுக்கான விளம்பரத்திற்க்கான வழங்கி இன்றும் அவ் ஏழைகளுக்கு பணம் வழங்காது ஏமாற்றிவருகிறார்.
இதேபோல் தன் சுய தேர்தல் விளம்பரத்திற்க்கான முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் தண்ணீரூற்று பிரதேசத்தில் புத்தக கடைவைத்திருக்கும் காண்டி அவர்களிடமும் 4500,000/-ரூபா பெறுமதியான பொருட்களை கடனாக கொள்வனவு செய்த பீற்றர் இளச்செழியன் 4வருடமாக இன்றுவரை பணத்தை வழங்காது ஏமாற்றிவருகிறார்.
இவ்வாறு தனது வாழ்நாளில் எந்த தொழிழையும் செய்யாத வருமானம் திரட்டாத இலங்கை தமிழரசு கட்சி இளைஞர் அணி தலைவரும், சுமந்திரன் விசுவாசியான பீற்றர் இளச்செழியன் இவ்வாறு ஏமாற்றுதல்கள் மூலம் பெற்ற பணம்கள், இவர் தந்தையால் ஏழைகளிடம் அறாவட்டிக்கு ஈட்டுக்கு பெற்று கையகபடுத்திய காணி சொத்துகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொன்றாக விற்பனை செய்து சுகபோகமாக தொழில்புரியாமல் ஏமாற்றி அரசியல்பேசி வாழ்ந்து வருகிறார்.