மேல், தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது..
Post Views: 149





