அரசியல்வாதிகள் வேலைவாய்ப்பை தங்களால் உருவாக்க முடியாதபோது அதனை மறைப்பதற்காக சிறுபான்மையினத்தவர்களை தாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை இலங்கை அனுபவிக்கின்றது என இந்திய ரிசேர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
லிபரல் ஜனநாயகத்தையும் அதன் கட்டமைப்புகளையும் வலுப்படுத்துவதிலேயே இந்தியாவின் எதிர்காலம் தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மை வாதம் குறித்து எச்சரித்துள்ள அவர் வேலைவாய்ப்பு நெருக்கடியிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக அரசியல்வாதிகள் சிறுபான்மையினத்தவர்களை தாக்குவதால் என்ன நடக்கும் என்பதற்கு இலங்கை உதாரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
பாரிய சிறுபான்மையினத்தவர்களை இரண்டாம் தர பிரஜைகளாக மாற்றும் முயற்சிகள் நாட்டை பிளவுபடுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் லிபரல் ஜனநாயகத்தை நிச்சயம் வலுப்படுத்தவேண்டும்,ஜனநாயகம் ஒரு பலவீனம் அல்லது பின்னடைவு என்ற எணணம் இந்தியாவில் சில தரப்பினரிடம் காணப்படுகின்றது, இந்தியா வளர்ச்சியடைவதற்கு வலுவான ஏதேச்சதிகார தலைமைத்துவம் சில கட்டுப்பாடுகளுடன் அவசியம் என்ற எண்ணம் காணப்படுகின்றது நாங்கள் அந்த திசையை நோக்கி பயணிக்கின்றோம் போல தோன்றுகின்றது என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து தவறானது என நான் கருதுகின்றேன் இது பொருட்களிற்கும் முலதனத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மக்களிற்கும் சிந்தனைகளிற்கும் முக்கியத்துவம் அளிக்காத காலத்தால் வலுவிழந்த மாதிரி என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி என்ற விடயத்தில் இந்தியாவின் குறைவான செயல்திறன் நாங்கள் பயணிக்கும் பாதை மீளசிந்திக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லிபரல் ஜனநாயகத்தையும் அதன் கட்டமைப்புகளையும் வலுப்படுத்துவதிலேயே எங்கள் எதிர்காலம் தங்கியுள்ளது பலவீனப்படுத்துவதில் இல்லை – அதனை வலுப்படுத்துவதே எங்கள் வளர்ச்சிக்கு அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை ஏதேச்சதிகாரத்தை ஏன் தோற்கடிக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ள இந்தியாவின் ரிசேர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பாரிய சிறுபான்மையின சமூகத்தை இரண்டாம் தர பிரஜைகளாக மாற்றுவதற்கான முயற்சிகள் நாட்டை பிளவுபடுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





