எரிபொருள் அனுமதி பதிவு எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் மேல்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று காலை தனது டுவிட்டர்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளித்த சகல தரப்பினருக்கும் QR குறியீடுகளை பின்பற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று முதல் QR முறையின் ஊடாக மட்டுமே நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகிறது.. சில பகுதிகளில் வழமை போன்று நீண்ட வரிசைகள் காணப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்