இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் மொத்த எண்ணிக்கை அரச தரவுகளின்படி சராசரியாக 8 மில்லியன். தற்பொழுது வரை QR System இல் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக 5 மில்லியன்.
பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் வாரம் ஒன்றுக்கு ஒரு தடவை படி எரிபொருள் நிலையத்துக்கு வருகை தந்தாலே ஒரு நாளைக்கு 714,285 பேர் எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தருவர்.
இலங்கை முழுவதும் ஏறக்குறைய 1,190 எரிபொருள் நிலையங்கள் இருக்கின்றன. அந்த எரிபொருள் நிலையங்கள் அனைத்தும் 24 மணித்தியாலங்களும் இயங்கினால் கூட ஒரு எரிபொருள் நிலையத்துக்கு ஒருநாளைக்கு 600 பேர் எரிபொருள் நிரப்ப வருகை தருவர்.
QR System சரிபார்த்து பணத்தை செலுத்தி வாகனம் எரிபொருளைப் பெற்றுக்கொண்டு வெளியேற சராசரியாக ஒரு வாகனத்துக்கு 3 நிமிடங்கள் பிடித்தால் 600 வாகனங்களுக்கும் ஏறக்குறைய 1,800 நிமிடங்கள் வேண்டும். ஆனால் ஒரு நாளில் இருப்பதோ 1,440 நிமிடங்களே.
நிற்க. இது தற்பொழுது வரை பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்கள், வாரம் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் என்ன நிகழும் என்ற கணக்கு மட்டுமே.
இன்னும் ஏறக்குறைய 3 மில்லியன் வாகனங்கள் QR System இல் பதிவு செய்யப்பட வேண்டி உள்ளது. அதனை விட பதிவு செய்யப்பட்ட வாகனங்களும் கூட வாரத்திற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட தடவைகள் எரிபொருள் நிலையத்துக்கு வருகை தருவது நிச்சயம் நிகழும். ஏனென்றால் எல்லோரும் ஒரே தடவையில் தங்கள் கோட்டாவை கொள்வனவு செய்யப்போவது இல்லை.
அதனைவிட தற்பொழுது சகல எரிபொருள் நிலையங்களும் ஒரே நேரத்தில் இயங்குவது இல்லை. அது போல எந்தவொரு எரிபொருள் நிலையமும் 24 மணி நேரமும் இயங்குவதும் இல்லை.
அப்படி என்றால், எல்லா எரிபொருள் நிலையங்களும் சேர்ந்து 24 மணி நேரமும் எரிபொருளை வழங்கினாலும் இந்த எரிபொருள் வரிசைக்கு தற்போதைக்கு ஒரு முடிவு வராது போலவே தோன்றுகிறது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





