பாண் பனிஸ்கள் இனி இல்லாமல் போகும்

தற்போதைய நெருக்கடி மற்றும் பொருளாதார சூழ்நிலையில் , பாண்கள் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இல்லாமல் போகும். அதாவது பேக்கரி உற்பத்திகளை நிறுத்த வேண்டி வரும் என வரும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் (ACBOA) தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பேக்கரி உணவு உற்பத்திக்கான பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக தற்போது பேக்கரி களில் 50% உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மிகுதியும் மிக விரைவில் நின்றுவிடும்.
பேக்கரித் தொழில் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாகவும், நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் வீழ்ச்சியடையும் எனவும் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன் .
இந்த எரிபொருள் நெருக்கடி குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் தெரிவித்தோம். ஆனால் அமைச்சரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.
பேக்கரி உற்பத்தியும் அத்தியாவசிய சேவை பிரிவின் கீழ் வருகிறது. ஆனால் பேக்கரி தொழிலை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எயாரும் அவர் தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்