ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் பதவி விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதை அடுத்து சபாநாயகர் இன்று மாலை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ள போதிலும், ஜனாதிபதியின் இருப்பிடம் தெரியவரவில்லை.

இதில் கட்சித்தலைவர்கள் நேரடியாகவும் சிலர் ZOOM தொலை நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டுள்ளனர்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் பதவி விலகக் கோரி பொதுமக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மதிப்பளிப்பதாக பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்