காங்கேசன்துறையில் இருந்து பாண்டிச்சேரிக்கான சரக்கு கப்பல் – பாதுகாப்பு அமைச்சு அனுமதி

இந்தியாவின் பாண்டிச்சேரி – காங்கேசன்துறைக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் சரக்கு கப்பல் காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் எரிபொருள், உரம், பால் மா மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சுமார் 300 மெட்ரிக் டன் சரக்குகள் கப்பலொன்றின் மூலம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், அவ்வாறான கப்பல் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவு கொழும்பு துறைமுகத்தை விட குறைவு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த சரக்குக் கப்பல் சேவையை இயக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்