மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கு அமைய மட்டக்களப்பு நகர் மற்றும் நகர் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகளில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்ட நடவடிக்கை மட்டக்களப்பு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில் இடம்பெற்றது
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





