நாட்டில் மின்சாரத்தின் தேவை விநியோகத்தை விட அதிகமாக இருந்தால், நாளாந்த மின்வெட்டு இன்னும் மூன்று வருடங்களுக்கு தொடரலாம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் (CEBEU) நேற்று (15) எச்சரித்துள்ளது.
தினசரி மின் தடைகள் வழங்கல் மற்றும் தேவையைப் பொறுத்தது. மேலும் தேவை அதிகமாக இருந்தால், நாங்கள் மின் தடையை அமுல்படுத்த வேண்டும். எங்களுடைய மின் வழங்கும் திறன் சில வழிகளில் அதிகரிக்கும் வரை, இந்தப் பிரச்சனை தொடரும்” என்று CEBEU தலைவர் அனில் ரஞ்சித் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இலங்கை தற்போது தனது மின்சாரத்திற்காக நீர், அனல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்துள்ளது . இந்நிலையில் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டால், மின்வெட்டை அமுல் படுத்துவதைத்தவிர வேறு வழி இல்லை . சூரிய சக்தி ஒரு தீர்வு என்று சிலர் நினைக்கிறார்கள், ஆனால் அது பகல்நேரத்திற்கு மட்டுமே. இரவு நேரத்தில் மின் தேவை அதிகரிக்கிறது. எரிபொருளோ, நிலக்கரியோ இல்லாவிட்டால், மின்தடைக்கு செல்ல வேண்டியிருக்கும். நிலக்கரி அல்லது சோலார் பேட்டரிகள் அல்லது பிற வழிகள் மூலம் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்.
CEBEU இன் மின் உற்பத்தித் திட்டத்தில், குறிப்பிட்ட கால இடைவெளியில் மின் நிலையங்கள் நிறுவப்பட வேண்டிய இடங்கள் , அதன் அவசியம் குறித்து தெளிவு படுத்தியுள்ளது. இவை நடைமுறைப்படுத்தப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளில் விநியோகத்தை அதிகரிக்க முடியும். இல்லையெனில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மின்வெட்டு தொடரும் என எச்சரித்தார்.
கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களை மூட வேண்டியிருந்ததால், நாட்டு மக்கள் இந்த ஆண்டு ஒரு நாளைக்கு 13 மணிநேரம் மின்சாரத் தடையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அனல் மின் நிலையங்களுக்கான எரிபொருள் இறக்குமதிக்காக மாதந்தோறும் சுமார் 100 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, மாற்று ஆற்றல் பற்றிநம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





