6 இலட்சம் சீமெந்து மூடைகள் இறக்குமதி

எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பிறகு சீமெந்து தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளதாக சிமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

6 இலட்சம் சீமெந்து மூடைகளை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் நேற்று (19) நாட்டை வந்தடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தோனேசியாவிலிருந்து ஒரு கப்பல் 200,000 சீமெந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்ததுடன் பாகிஸ் தானிலிருந்து 400,000 சீமெந்து மூடைகளை ஏற்றிக் கொண்டு மற்றொரு கப்பல் வந்துள்ளது.

குறித்த சீமெந்து மூடைகள் விரைவில் சந்தைக்கு விடப்படும் எனவும் சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சந்தையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 1375 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில் கட்டிடப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் சுமார் 1500 ரூபாவுக்கு சீமெந்தை விற்பனை செய்கின்றனர்.

சில விற்பனையாளர்கள் மணல் அல்லது கல் வாங்கும்போது மட்டுமே சீமெந்தை விற்பதாகத் தெரிய வருகிறது.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

சிறப்புச் செய்திகள்