நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முழுமையான பங்களிப்பு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர்மின் உற்பத்தி சிலவற்றின் தொழிற்பாடுகள் செயலிழந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
லக்ஷபான, நவலக்ஷபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் கெனியோன் ஆகிய 5 நீர்மின் நிலையங்களின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன.
இதன்காரணமாக குறித்த நீர்மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்க பெறும் 300 மெகாவொட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று அதிகாலை முதல் கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஹட்டன், கொட்டகலை உள்ளிட்ட பிரதேசங்களிலும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com