200 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு சேவையில்

பழுதடைந்த 200 பேருந்துகள் புனரமைக்கப்பட்டு இன்று (22) முற்பகல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் வைத்து சேவையில் ஈடுபடுத்தப் பட்டன.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பேருந்து இறக்குமதியும் தற்காலி கமாக நிறுத்தப்பட்டதுடன், பேருந்து பற்றாக்குறைக்குத் தீர்வாக, பழுதடைந்த பேருந்துகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதல் கட்டமாக 2020 டிசம்பரில் 273 பேருந்துகள் பழுது நீக்கப்பட்டு இயக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் 107 டிப்போக்களில் முற்றாக செயலிழந்திருந்த 200 பேருந்துகள் இரண்டாம் கட்டத்தின் கீழ் 136 மில்லியன் ரூபா செலவில் திருத்தியமைக்கப்பட்டன.

இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மற்றும் லக்திவ பொறியியல் நிறுவனத்தினால் இலங்கை பொது போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பூரண அனுசரணையுடன் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

பேருந்துகளின் தரத்தை அவதானித்த ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுடன் கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்