கடந்த இரு மாதங்களில் 2 மில்லியன் தேங்காய் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ததன் காரணமாக எதிர்காலத்தில் சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவக் கூடும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் குறைந்தளவிலான தேங்காய் உற்பத்தியே கிடைக்கப்பெறும். தொடர்ந்தும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படும் பட்சத்தில் அதற்கான தட்டுப்பாடு மேலும் தீவிரமடையக் கூடும்.

நாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காயெண்னை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com