1,700 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு அதிக காலம் கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருப்பதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கு காரணம் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லையென அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

துறைமுகத்தில் தேங்கி இருக்கும் கொள்கலன்களில், அரிசி, பருப்பு, சீனி, கடலை, கொத்தமல்லி, தகரப் பேணியில் அடைக்கப்பட்ட மீன் உள்ளிட்ட பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கி உள்ளமையால், தாமதக் கட்டணமாக, ஒரு கொள்கலனுக்கு 50 முதல் 200 டொலர் வரையில் நாளாந்தம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படுவதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் இல்லாமை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாதமையால், அவசியமற்ற வகையில், தாமதம் கட்டணத்துக்காக டொலர்களை செலுத்த வேண்டி ஏற்படும் என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறாக தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதன் காரணமாக, அதனை ஈடு செய்வதற்காக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப்படுகின்றன.

இதற்கமைய, தாமதக் கட்டணத்துக்காக செலவிடப்படும் பணத்தை செலுத்த வேண்டிய நிலை நுகர்வோருக்கு ஏற்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ளமையால், அவற்றை விநியோகிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியில், இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்