சாதாரண குடும்பத்தின் மாதாந்தம் நுகர்வுக்கான செலவு 110,000 ரூபாவாக உயர்வு

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் சாதாரண குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் நுகர்வுக்கான செலவு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேராதனை பல்கலைகழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளவிபரவியல் ஆய்வுகள் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் சாதாரண குடும்பம் ஒன்றுக்கு மாதாந்த நுகர்வுக்கான செலவு 63 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது.

எனினும் தற்போது குறித்த தொகை 47 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைகழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்